Breaking News

கோத்தா குறித்த தீர்ப்புக்கு சவால் விடுக்கும் பிரதமர்

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தாக்கல் செய்த அடிப்­படை உரிமை மீறல் வழக்கில் உயர் நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பு எமக்கு சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் அடிப்­படை உரிமை மீறல் வழக்கு விசா­ர­ணையின் போது இரண்டு நீதி­ய­ர­சர்கள் கொண்ட குழு­விற்கு தடை உத்­த­ரவு பிறப்­பிக்க முடி­யாது. ஆகவே, இது தொடர்பில் சட்ட ஆலோ­சனை பெற்ற பின்னர் அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அத்­துடன் குறித்த வழக்­கினை ஒக்­டோபர் மாதம் வரை தள்ளிப் ­போட்­டமை நியா­ய­மற்ற செயற் ­பா­டாகும் என்றும் அவர் குறிப்­பிட் டார். பௌத்த மற்றும் இந்து மதத்­த­லை­வர்­களை அலரி மாளி­கையில் நேற்று சந்­தித்த பின்னர் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தாபய ராஜ­பக் ஷ தாக்கல் செய்த மனுவின் பிரதி நேற்று காலை எனக்கு கிடைக்­கப்­பெற்­றது.

இந்த மனு­வா­னது 600 பக்­கங்­களை கொண்ட கோவை­யாக காணப்­பட்­டது. எனி னும் குறித்த மனு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எனது கைக­ளுக்கு இது­வரை கிடைக்கப் பெற­வில்லை. அமைச்­ச­ரவை காரி­யா­லத்­திற்கு நேற்று கிடைக்­கப்­பெற்ற மனுவின் பிர­தி­யையே நான் பார்த்தேன்.

இந்த வழக்கு தொடர்பில் பிர­தமர் என்ற வகையில் எனக்கு அழைப்­பாணை விடுக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் எனக்கு எந்­த­வித தக­வலும் தெரிந்­தி­ருக்க வில்லை. ஊட­க­ங­களின் மூல­மா­கவே நான் இதனை அறிந்து கொண்டேன்.

இந்த வழக்கு ஒக்­டோபர் மாதம் வரைக்கும் தள்­ளி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது நியா­ய­மற்ற செயற்­பா­டாகும். நாட்டில் வெகு விரைவில் தேர்தல் நடத்­தப்­பட்டு புதிய பாரா­ளு­மன்றம் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. எவ்­வா­றா­யினும் புதிய பாரா­ளு­மன்­றத்­தி்னால் இவ்­வா­றான வழக்கு தொடர்பில் நியா­ய­மான முறையில் செயற்­பட முடி­யாது. இந்த வழக்­கிற்­கான தீர்ப்பு அவ­ச­ர­மாக வழங்­கப்­ப­ட­வேண்டும்.

மேலும் இந்த வழக்கில் உயர்­நீ­தி­மன்றம் வழங்­கிய தீர்ப்பின் மீது எமக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. அடிப்­படை உரிமை மீறல் தொடர்­பான வழக்­கு­களை ஏற்­றுக்­கொள்­வதா, இல்­லையா என்­ப­தனை முடி­வெ­டுக்கும் அதி­கா­ரம இரண்டு நீதி­ய­ர­சர்­களை கொண்ட குழு­விற்கு உள்­ளது. எனினும் இவ்­வா­றான வழக்கில் தடை உத்­த­ர­வினை பிறப்­பிப்­தாயின் மூவர் கொண்ட நீதி­ப­தி­களின் குழு­வி­னா­லேயே முடியும்.

எனவே முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை கைது செய்­வ­தற்கு தடை உத்­த­ரவு பிறப்­பிக்கும் வகையில் வழங்­கப்­பட்ட தீர்ப்பின் மீது தமக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. இந்த தீர்ப்­பினை இரண்டு பேர் கொண்ட குழு­வி­னரே வழங்­கி­யுள்­ளனர். இதன்­படி மேற்­கு­றித்த உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்­பினை சவா­லுக்­குட்­ப­டுத்த முடியும்.

கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்­வது குறித்­தான சிக்கல் பொலி­ஸா­ரிற்கே உள்­ளது. இது தொடர்பில் பொலிஸ் திணைக்­களம் பிரத்­தி­யே­க­மான முறையில் சட்ட ஆலோ­சனை பெற்று செயற்­பட வேண்டும். இந்த விட­யத்தில் இலங்­கையின் சட்­ட­வி­தா­னங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே செயற்­பட வேண்டும். அர­சி­ய­ல­மைப்பின் 132 ஆவது ஷரத்தில் இது தொடர்பில் தௌிவாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இரண்டுநீதியரசர்களின் தடை உத்தரவு செல்லுப்படியாகாது.

எனவே கோத்தாபய ராஜபக்ஷவின் வழக்கு தொடர்பான தீர்ப்பு முரண்பட கூடியதாக உள்ளது. எனவே இது குறித்து சட்ட ரீதியான ஆலோசனையை பெறவுள்ளேன். இதன்பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.