மாணவி கொலைக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை! ஜனாதிபதி யாழில் தெரிவிப்பு.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து அதனூடாக மிக விரைவில் தண்டனையை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.30 மணியளவில் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், மாணவியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து அதனூடாக மிக விரைவில் தண்டனையை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
மேலும் குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.