மாஞ்சோலை வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு! இன்றும் தொடரும்
முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் நேற்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப் பில் ஈடுபட்டனர்.
குறித்த நான்கு சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர்களை எதுவிதமான பதிலீடும் இன்றி இடமாற்றியமையை கண்டித்தே குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் நேற்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் இன்று வெள்ளிக்கிழமையும் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சுகிர்ந்தரராசா தெரிவித்தார். தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காமல் போனால் தொடர்ச்சி யான பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக வும் அவர் கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகை யில்,
மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய நான்கு சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர்கள் எதுவிதமான காரணங்களுமின்றி, கடந்த 25ஆம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்குமாறு தெரிவிக்கப்பட்டது.
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றியவர்களை இடமாற்றம் செய்யும் போது வைத்தியசாலையில் பதிலீடு எதுவுமின்றி, குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள் ளன. அதேவேளை, மாவட்ட வைத்தியசா லையில் கடமையாற்றும் சிரேஷ்ட உத்தியோ கத்தர்கள் இருவர் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலைக்கும், மற்றும் இருவர் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்திய சாலைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எமது ைவைத்தியசாலையில் 64 தாதியர் கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்க ளில் ஐந்து பேர் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள். எனவே, தற்போது கடமைபுரியும் 60 தாதிய உத்தியோகத்தர்களில் ஒருவரே சிரே ஷ்ட உத்தியோகத்தராவார்.
எனவே, சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையினால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து பிராந் திய சுகாதார பணிப்பாளர் ஊடாக சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி யிருக்கின்றோம். எமது கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் தொடர்ச்சியான பகி ஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளோம் என் றார்.