பசில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்!
இன்று காலை கடுவெல நீதிமன்றில் பசில் ராஜபக்ச முன்னிலையாவார். அண்மையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பசில், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றில் முன்னிலையாகும் பசிலுக்கு பிணை பெற்றுக் கொள்ள அவரது சட்டத்தரணிகள் முயற்சிக்கவுள்ளனர். தற்போது பசில் ராஜபக்சவின் உடல் நலம் தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி கடுவெல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பசில் ராஜபக்ச, 23ம் திகதி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.