Breaking News

சிங்கள நாடு அல்ல இது! விஜயதாஸ கருத்தால் தெற்கில் பெரும் பரபரப்பு!

இலங்கை சிங்கள நாடல்ல. இலங்கையர்களின் நாடென நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்‌ஷ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து தொடர்பில் தெற்கு சிங்கள மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. 

பிரதானமாக சமூக ஊடக வலத்தளங்கள் மூலமாக இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அரசுக்கு எதிரான கருத்துக்களும் பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அது மாத்திரமல்லாது இதன் பின்னணியில் அரசியல் இலாபம் தேடுவதற்காக சில சக்திகள் செயற்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குடாநாடு முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டம் பொலிஸ் இராணுவத்தினரின் தலையீட்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுதலைப் புலிகள் இவ்வாறே தமது ஆர்ப்பாட்டத்தை முதலில் ஆரம்பித்தார்கள். 

மீண்டும் விடுதலைப்புலிகள் தோன்றுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கருத்துத் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் அரச தரப்பினரால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை விசேட ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டிருந்த நீதியமைச்சர் முன்னாள் ஜனாதிபதியின் கருத்தை வன்மையாகக் கண்டித்ததுடன் இது பொதுவான நாடு என்றும், சிங்கள நாடு அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

 இக்கருத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் சிங்கள ராவய அமைப்பும் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன் இதன்போது விஜயதாஸ ராஜபக்‌ஷவின் கருத்துக்கு கண்டனம் வெளியிட்டது. நீதியமைச்சரின் இவ்வாறான ஒரு கருத்தினால் அவ்வமைப்பு அதிருப்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ இவ்வாறானதொரு கருத்தை வெளியிடுவார் என்று வாழ்நாளில் நான் நினைக்கவில்லை. நான் ஒரு பெளத்தன். எனது நானும் அவர் மேல் அன்பு வைத்துள்ளேன். அவரும் என் மீது அன்பு வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் விஜேதாஸ ராஜபக்‌ஷவுடன் நல்ல ஒரு உறவை கட்டியெழுப்பியுள்ளோம். 

எனினும், அமைச்சர் இவ்வாறானதொரு கருத்தை வெளியிடுவார் நான் நினைக்கவில்லை. இவரின் கருத்தினால் நாங்கள் மிகவும் மனவேதனையடைந்துள்ளதுடன், மீண்டும் இவ்வாறான ஒருவரை நாடாளுமன்ற அமைச்சராக மக்கள் நியமித்தால் சிங்களவர்களுக்காக குரல் கொடுக்கும் எங்கள் அமைப்பை கலைத்துவிடுவோம்'' - என்று மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.