Breaking News

தாக்குதலுக்குள்ளான நீதிமன்ற கட்டடதொகுதி இராணுவத்தினால் புனரமைப்பு

ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதி இன்று இராணு வத்தினரால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. 

 கடந்த 20 ஆம் திகதி பொலிஸாரின் கட்டுக்களையும் உடைத்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள் கற்கள் , பொல்லுகள் மற்றும் கண்ணாடிப் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதம நீதியரசர் உடனடியாக சேதங்களை திருத்துமாறு கட்டளையிட்டார். இதனையடுத்து இன்றைய தினம் இராணுவத்தினரால் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.