போதைப்பொருள் வியாபாரிகளின் புகைப்படம் வெளியிடப்படும் - யாழ்.மாவட்ட செயலகம் அதிரடி!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilf-jeettF6t-1kDOiCeZk87H866W5Hi3089hdJTvs2vhL986bfNuffp1sxN2xjmVdLxn2YnXgh2if276peV-XIYnckX2qBnJ5Nn3SQ1tJ_RPP7ixaXScjymkeBMwZLQDdYNhZ9DwOzx0/s200/jj_CI.png)
போதைப்பொருள் விற்பனை மற்றும் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளின் படங்களையும், விபரங்களையும் பகிரங்கப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு வெளியிடப்படும் விபரங்கள் உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. சமூகவிரோதிகளின் முகங்களை வெளிச்சமிட்டு காட்டவே இந்த அதிரடி நடவடிக்கை என்கிறது மாவட்ட செயலகம்.
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை ஆதாரபூர்வமாக பொலிசாருக்கு வழங்கியபோதும், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றம்சாட்டும் மாவட்ட செயலக அதிகாரிகள், இதனை தொடர அனுமதிக்க முடியாத நிலையிலேயே விபரங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 27இல் மாணவட்ட செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதில் போதைப்பொருள் விற்பனை, சமூகவிரோத செயல்கள் நடக்கும் இடங்கள் பற்றிய விபரங்களை அடையாளமிட்டிருந்தனர். அந்த அறிக்கை பொலிசாரிடமும் வழங்கப்பட்டபோதும், அவர்கள் அதனை குப்பைக்கூடைக்குள் போட்டு விட்டனர்.
இதனைய:த்தே மாவட்ட செயலகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. போதைப்பொருள் விற்பனையாளர்களின் புகைப்படங்கள், பெயர் முகவரிகள், புனைபெயர்கள், விற்பனை செய்யும் இடம், நேரம் என அனைத்து விபரங்களையும் விலாவாரியாக சேகரித்து வைத்துள்ளதாகவும், அதனை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.