உலகின் செல்வாக்குமிக்க விளையாட்டு வீரர்களில் ஒரே ஒரு கிரிக்கெட் வீரருக்கு இடம் !
உலகின் 50 செல்வாக்குமிக்க விளையாட்டு வீரர்களின் பட்டியலை 'பிசினஸ் இன்சைடர்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் இடம் பெற்றுள்ளார். அவரும் இந்தியர் அல்ல. பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது அமெரிக்காவை சேர்ந்த வீராங்கனை என்பதும் கூடுதல் தகவல். அதோடு முதல் 10 இடங்களில் 3 வீராங்கனைகள் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
'பிசினஸ் இன்சைடர்' வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் நடிகையும் அமெரிக்க தற்காப்பு கலை வீராங்கனையுமான ரோன்டா ஜீன் ருசே முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் ஆவார். கடந்த உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகன் விருதை பெற்ற மிட்செல் ஸ்டார்க், இந்த பட்டியலில் 31வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியர் உள்பட வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.
முதல் 10 இடத்தில் உள்ள செல்வாக்குமிக்க விளையாட்டு வீரர்கள் வருமாறு:
ரோன்டா ருசே- தற்காப்பு கலை வீராங்கனை
லெப்ரான் ஜேம்ஸ்- கூடைப்பந்து
செரினா வில்லியம்ஸ்- டென்னிஸ்
கிறிஸ்டியானோ ரெனால்டோ- கால்பந்து
உசேன் போல்ட் - தடகளம்
சைமன் பில்ஸ்-ஜிம்னாஸ்டிக் வீராங்கனை
லயனல் மெஸ்சி - கால்பந்து
கிளேட்டன் கேர்சாவ்- பேஸ்பால்
நோவக் ஜோகோவிச்-டென்னிஸ்
கேத்தி லெட்கி- நீச்சல் வீராங்கனை