அவுஸ்திரேலியாவிலும் அவதாரமெடுக்கும் சங்கக்கார
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பாஷ் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஹொபார்ட் அணிக்காக இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சங்காவுடன் டரன் சமியும் இவ்வணியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சங்கக்கார தாம் பிக் பாஷ் வீக்கில் பங்குபற்ற ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
38 வயதான சங்கக்கார 404 ஒரு நாள் போட்டிகளில் பங்குபற்றி 14234 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், உலகக்கிண்ணத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.