இந்திய சிறைகளிலிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை
இந்திய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப் பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 17பேர், அந்நாட்டு அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் பி.ரமேஸ் கண்ணா தெரிவித்தார். திருகோணமலை, புத்தளம் மற்றும் தெவுந்தர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கிணங்க விடுதலை செய்யப்பட்டதை அடுத்தே அந்நாட்டு சிறைகளிலிருந்த இலங்கை மீனவர்களும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.