Breaking News

நீதிமன்றத் தாக்குதலை அடுத்து வடக்கிற்கு எரிபொருள் கொண்டு செல்ல தடைவிதித்த அரசாங்கம்

யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மீது கடந்தவாரம் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, வடக்கிற்கு எரிபொருள் கொண்டு செல்வதை அரசாங்கம் இடைநிறுத்தியதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களின் போது, யாழ்.நீதிமன்றம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். கடந்த 20ம் நாள் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, யாழ்.நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, வடபகுதிக்கு எரிபொருள் கொண்டு செல்வதை அரசாங்கம் தடுத்து வைத்திருந்தது. அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் உத்தரவின் பேரிலேயே, அனுராதபுரத்தில் எரிபொருள் தாங்கிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.