கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பில் விசேட குழு அமைக்க முடிவு
கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தி வேலைத்திட்ட மேற்பார்வை மற்றும் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இது குறித்து அமைச்ரவைக்கு சமர்பிக்கப்பட்ட பத்திரத்தில் உள்ள விடயங்கள் வருமாறு,
கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தி வேலைத்திட்ட மேற்பார்வை மற்றும் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வேண்டி செயலாளர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்தல் (விடய இல 47)
இவ் வேலைத்திட்டம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் குறித்த வேலைத்திட்டம் இடை நிறுத்தப்பட்டது. இதன் கீழ் இணங்காணப்பட்ட குறைப்பாடுகள் மற்றும் அதன் செயற்பாடுகளை சரி செய்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்குவதற்கு உள்ள அவகாசங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் பிரதமரின் செயலாளரின் தலைமையில் கீழ் உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவொன்றை அமைப்பதற்கு கொள்கை திட்டமிடல், பொருளாதார விவகார, சிறுவர், இளைஞர் மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.