Breaking News

வித்­தியா படு­கொலை தொடர்பில் தொடர்ந்தும் சி.ஐ.டி.யினர் பல­கோ­ணங்­களில் விசா­ர­ணை - பொ­லிஸ் ­பேச்­சாளர்

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யா கூட்டு பாலியல் வன்­மு­றைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட மை தொடர்­பி­லான விசா­ர­ணை­கள்­ வி­சேட குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரால் பல­கோ­ணங்­களில் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இந்தச் சம்­பவம் தொடர்பில் சந்தே­கத்­தின் பேரில் கைது செய்­யப்­பட்டுள்ள 9 பேரையும் தவி­ர விசா­ர­ணைகள் முடி­வ­டையும் வரை இத­னுடன் மேலதி­க­மாக தொடர்­பு­டை­ய­வர்கள் குறித்து எதனையும் குறிப்­பிட முடி­யாது என்­றும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்­தில் ­நேற்று வெ ள்ளிக்­கி­ழ­மை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­சந்­திப்பின் போதே பொலிஸ்­ ஊ­டகப் பேச்­சா­ளரும் பொலிஸ்­ அத்­தியட்­ச­க­ரு­மான ரூவன் குண­சே­கர மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

இதன்­போது அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் யாழ்­பாணம் புங்­கு­டு­தீவு மாணவி கூட்டு பாலியல் வன்­மு­றைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் பல­கோ­ணங்­களில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரினால் விசா­ரா­ணை­கள்­முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

அந்த வகையில் கொலை­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளாக சந்­தே­கத்­தின்பேரில் இது­வரை 9 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தோடு இவர்கள் தொடர்பில் குற்­றப்­பு­லனாய் பிரி­வினர் ஸ்த்தலத்தில் இருந்து விசா­ரா­னை­களை பல­கோ­ணங்­க­ளில்­முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

குறித்த சம்­ப­வத்தை கண்­டித்து யாழ்­பா­ணத்தில் அன்­மை­யில் ­ந­டை­பெற்ற ஆர்­பாட்­டத்தில் எற்­பட்ட அமை­தி­யின்­மையை தொடர்ந்து அங்கு பொது சொத்­து­க­ளுக்கு சேதம்­வி­ளை­விக்­கப்­பட்­டமை தொடர்பில் 130 பேர் கைது செய்­யப்­பட்­டனர். இவர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரால் ­முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தோடு இந்த ஆர்­பாட்­டத்­தின்­போது பொலி­ஸாரின் செயற்­பா­டுகள் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இதில் பொலி­ஸா­ரினால் ஏதே­னும் ­த­வ­றுகள் இடம்­பெற்­றுள்­ளமை உறு­திப்படுத்­தப்­ப­டு­மானால் கட­மை­யில்­இ­ருந்த பொலி­ஸா­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றார்.

இத­னி­டையே இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய குற்­ற­வாளி ஒரு­வரை பாது­காக்கும் முக­மாக உயர்­பொலிஸ் அதி­காரி ஒருவர் செயற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­ ஒ­ரு­வ­ரி­னால் ­கேள்வி எழுப்­ப­பட்­டது. இதற்கு பதி­ல­ளித்த பொலிஸ் ஊடக பேச்­சாளர்,

குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்பு உடை­ய­வர்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்பெற்றுவரும்நிலையில் உயர்பொலிஸ் அதிகாரி ஒருவரின் தொடர்பு குறித்­து பொலிஸ்மா அதிபருக்கோ பொலிஸ்திணைக்களத்திற்கோ எந்த ஒரு அறிக்கையும் இதுவரை கிடைக்கவில்லை அவ்வாறான அறிக்கை ஒன்று கிடைக்கும் பட்சத்தில் முழுமையான விசாரணைகளின் பின் குறித்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.