எவரின் தனிப்பட்ட கொள்கைக்காகவும் நான் செயற்படுவதில்லை - ஜனாதிபதி
எந்த நபருடைய தனிப்பட்ட கொள்கைக்காகவும் தான் செயற்படுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தான் நாட்டிலுள்ள அனைத்து மக்களின் தலைவர் என்ற ரீதியில் மக்களின் பிரச்சினைகளுக்காகவே முன் நிற்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பொலன்னறுவையில் இன்று நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் காணப்பட்ட அதி கூடிய அதிகாரங்களை நீக்கி, 37 வருடங்களாக நாட்டு மக்கள் கேட்டுக்கொண்ட அரசியல் மாற்றம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதோடு, சுதந்திர கட்சியின் அனைத்து அரச தலைவர்களின் கோஷம் நிறைவடைய தான் செயற்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.