Breaking News

எமது மண்ணில் தொழில் அனுமதி மறுக்கப்படுகிறது! நாயாறு மீனவர்கள் ஆதங்கம்

முல்­லைத்­தீவு நாயாறில் பூர்­வீ­க­மாக வாழும் மீன­வர்கள் எமது மண்ணில் எமக்கே தொழில் அனு­மதி மறுக்­கப்­ப­டு­வ­தாக ஆதங்கம் வெளி­யிட்­டுள்­ளனர். இப்­பி­ர­தேச மீனவர் ஒரு­வரை வெளி­யேற்­று­வ­தற்கு திட்­ட­மிட்ட நட­வ­டிக்கை இடம்­பெற்­றுள்­ள­மை­யை­ய­டுத்தே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளனர்.

1998ஆம் ஆண்­டி­லி­ருந்து தன்­னு­டைய சொந்த ஊரிலே கடற்­றொழில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­வரும் 2012ஆம் ஆண்டில் இலங்கை கடற்­றொழில் அமைச்­சரால் குறித்த பகு­தியில் கரை­வலைத் தொழிலை மேற்­கொள்­வ­தற்­கான அதி­கா­ர­பூர்வ அனு­ம­தியைப் பெற்­ற­வ­ரு­மான தனேஸ்­குமார் என்­கின்ற முல்லை நாயாறைச் சேர்ந்த தமிழ் மீன­வ­ரையே வெளி­யேற்றும் நட­வ­டிக்கை தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி வருகை தந்­தி­ருந்த கடற்­றொழில் பணிப்­பாளர் நாய­கத்தால் முல்­லைத்­தீவு கடற்­றொழில் திணைக்­க­ளத்தில் வைத்து தனேஸ் குமாரை வெளி­யே­று­மாறும் குறித்த கரை­வ­லைப்­பாடு தென்­னி­லங்கை மீன­வ­ருக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது எனவும் முறை­யற்ற வகை­யி­லான உத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் அப்­பி­ர­தேச மக்­கள் வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து வட­மா­காண சபை உறுப்­பினர் துரை­ராசா ரவி­கரன் நேரில் விஜயம் செய்தார். அங்­கி­ருந்த நிலை­மைகள் தொடர்பில் கேட்­ட­றிந்து கொண்­டவர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளியி­டு­கையில்,

457 மீற்றர் தூர கரை­வலை தொழில் அனு­ம­தியைப் பெற்­றி­ருந்த தனேஸ்­குமார் 150 m வரை­யான பகு­தி­யி­லேயே தொழில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

பாறைகள்,கட்­டைகள் என்று சீரற்ற பகு­தி­யாக இருந்த அந்­தப்­ப­கு­தியை சீர் செய்து அப்­ப­கு­தியில் அவர் கரை­வலைத் தொழிலை மேற்­கொண்டு வரு­கையில், கடந்­த மே மாதம் 30ஆம் திகதி முல்­லைத்­தீவு கடற்­றொழில் திணைக்­க­ளத்தில் வைத்து கடற்­றொழில் பணிப்­பாளர் நாய­கத்­தினால், போலி­யான வரை­படம் ஒன்றின் அடிப்­ப­டையில் தனேஸ்குமாரின் கருத்­துக்­களை கேட்­ட­றி­யா­ம­லேயே தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் குறித்த கரை­வ­லைப்­பாடு தென்­னி­லங்கை மீன­வ­ருக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது என்று தனேஸ்குமாரை வெளி­யே­று­மாறும் தீர்ப்­பைக்­கூ­றி­விட்டு சென்றிருக்கின்றார். எமது மண்ணில் எமக்கே அனுமதி மறுக்கப்படுகிறது என நாயாறு மக்கள் ஆதங்கத்துடன் கருத்து வெளியிட்டனர். குறித்த மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளேன் என்றார்.