Breaking News

கொக்­கி­ளாயில் விகாரை கட்டும் பணியை உட­ன­டி­யாக நிறுத்­துங்கள் - சிவ­சக்தி ஆனந்­தன் வேண்டுகோள்

கொக்­கி­ளாயில் விகாரை கட்டும் பணியை உட­ன­டி­யாக நிறுத்தி நீதிக்கும் தர்­மத்­திற்கும் இட­ம­ளியுங்கள் என வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

குறித்த விடயம் தொடர்­பாக ஜனா­தி­ப­திக்கு அவர் நேற்று அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேற்­கண்­ட­வாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அக்­க­டி­தத்தில் மேலும் தெரிவிக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கொக்­கி­ளாயில் மருத்­து­வ­மனை அமைந்­துள்ள பகுதி மற்றும் அதற்கு அண்­மைய தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி­களை நீதி­மன்ற ஆணை­யையும் மீறி அப­க­ரித்து, படைத்­த­ரப்­பி­னரின் உத­வி­யுடன் பௌத்த தேரர் ஒருவர் விகா­ரை அமைக்கும் பணியில் ஈடு­பட்­டுள்ளார். இந்தக் காணி அப­கரிக்­கப்­பட்­டதை எதிர்த்து கடந்த 2011ஆம் ஆண்­டி­லி­ருந்து அப்­போ­தைய அர­சாங்­கத்­திடம் பல்­வேறு முறைப்­பா­டு­களைச் செய்தும் தற்­போது வரை குறித்த காணி உரி­ய­வ­ரிடம் கையளிக்­கப்­ப­ட­வில்லை. இந்­நிலையில் தற்­பொ­ழுது அங்கு விகா­ரையை கட்டும் பணி துரி­த­க­தியில் நடை­பெற்று வரு­கின்­றது.

வட­மா­கா­ணத்தில் பர­வ­லாக மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் பௌத்­த­வி­காரை கட்­டு­மா­னங்­க­ளுக்கு எதி­ரா­கவும் குறிப்­பாக தனியார் காணி­களை அப­க­ரித்து விகாரை அமைக்கும் பணி­க­ளுக்கு எதி­ரா­கவும் நாம் தொடர்ந்தும் எமது எதிர்ப்­பினைத் தெரி­வித்து வந்­துள்ளோம். மேற்­படி கொக்­கிளாய் தனியார் காணி தொடர்­பாக முந்­தைய அர­சாங்­கத்­து­ட­னும்­கூட பல்­வேறு முறைப்­பா­டு­களைச் செய்­துள்ளோம். மேற்­படி கொக்­கி­ளாயில் உள்ள தனியார் காணி தொடர்­பான வழக்கும் நீதி­மன்­றத்தில் நிலு­வையில் உள்­ளது.

இவை அனைத்­தையும் அசட்­டை­செய்து படைத்­த­ரப்­பினர் இப்­பொ­ழுது கொக்­கி­ளாயில் உள்ள தனியார் காணியில் விகாரை கட்டும் பணியில் ஈடு­பட்­டுள்­ளனர். தங்­களின் தலை­மையில், படை­யினர் உங்­க­ளது ஆணைக்குக் கட்­டுப்­பட்டு இத்­த­கைய சட்­ட­வி­ரோ­த­மான தர்­மத்­துக்கும் நீதிக்கும் புறம்­பான பணி­களில் ஈடு­பட மாட்டார்கள் என்று நினைத்­தி­ருந்தோம். ஆனால் இன்றும் சட்­டத்­தின்­மீது எவ்­வித அச்­சமும் தயக்­க­மு­மின்றி சட்­டத்தை ஒதுக்­கி­வைத்­து­விட்டு, நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களைப் புறந்­தள்­ளி­விட்டு கட்­டு­மானப் பணிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

தங்­க­ளது அர­சாங்கம் இத்­த­கைய தர்­ம­வி­ரோத, சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களைத் தடுத்து நிறுத்த தவ­று­மானால், நல்­லி­ணக்கம் என்­பது அர்த்­த­மற்­ற­தா­கி­விடும் என்று நாங்கள் உணர்­கின்றோம். ஆகவே. தாங்கள் உட­ன­டி­யாக இந்த விட­யத்தில் தலை­யிட்டு, கட்­டு­மானப் பணி­க­ளுக்கு முற்­றுப்­புள்­ளி­வைத்து, படை­யி­னரை திரும்­பவும் தங்­க­ளது முகாம்­க­ளுக்குள் இருக்­கு­மாறு பணிப்புரை வழங்க வேண்டும். அத்துடன் குறித்த காணியை உரித்துடைய தனியாருக்கே ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். இது மட்டுமே வடமாகாணத்தில் அமைதியையும் இயல்பு வாழ்வையும் மீளக் கட்டியெழுப்பும். இந்த விடயத்தில் தங்களது காத்திரமான உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கின்றோம் என்றுள்ளது.