Breaking News

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உரைத்த பேருண்மை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என். ரவிராஜ் இராணுவத் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவலை குற்றப்புல னாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இராணுவத் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்லப் பட்டார் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்திருப்பது என்பது மிகப்பெரும் ஆச்சரியமான விடயம்.

கடந்த முப்பது ஆண்டு காலத்தில் தமிழின அழிப்பு என்பது எத்துணை மோசமாக நடந்தது என்பது உலகறிந்த விடயம். இருந்தும் தமிழினத் தில் நடந்த கொலைகள் நீதிவிசாரணைகள் இன்றி அமிழ்ந்து போன சம்பவங்கள் ஏராளம்.

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு தமி ழன் இறந்தால் அவனுக்கு வழங்கப்பட்ட பட்டம் பயங்கரவாதி என்பதாகும். இராணுவத்தின் துப்பாக்கி துளைத்த அத்தனை தமிழர்களும் பயங்கரவாதிகள் என்று பட்டியல்படுத்தப்பட்ட இந்த நாட்டில், இப்போதுதான் ஓர் ஒளிக்கீற்று தெரிகிறது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் எந்தப்பக்கச்சார்புமின்றி ஓர் உண்மை வெளிப் படுத்தப்பட்டுள்ளது.ஆம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி ராஜ் இராணுவத் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார் என்று இந்த நாட்டின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியது எனில் அந்த உண்மையை எப்படி உயர்வுபடக் கூறுவதென்று தெரியவில்லை. 

2008ஆம் ஆண்டு கொழும்பில் காணாமல் போன ஐந்து தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு கடந்த 3ஆம் திகதி கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டபோது, ஐந்து தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதில் கடற்படைக்குத் தொடர்பு உள்ளது என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்த போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களமா? இப் படிச் சொல்வது என்று தமிழர்கள் திகைத்தனர்.

அந்த திகைப்பு எடுபடுவதற்கு முன்னதாக, இராணுவத் துப்பாக்கியாலேயே ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற மற்றொரு பேருண்மையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்திருப்பது; 

இறைவா! நீ கண் விழித்து விட்டாய். இது போல தமிழர் தாயகம் எங்கும் நடந்த கொலைகள் பற் றிய உண்மைகளையும் வெளிப்படுத்து என்று மனம் மன்றாடுகிறது. ஜனநாயகம் மலர்ந்தால் உண்மைகள் நிச்சயம் வெளிவரும். அந்த ஜனநாயக மலர்ச்சிக்கு வாக்களித்தவர்கள் தமிழர்கள்.

அதனால்தான் வருணபகவானும் காண்டாவனம் (காண்டவ தகனம்) என்றும் பார்க்காமல் வடக் கில் கோடையிலும் மழை பொழிய வைத்தார்.  அன்புக்குரிய தமிழ் நெஞ்சங்களே! நீதியை நிலைநாட்டும் பெரும் பணி எங்களிடமும் உண்டு. அதைச் செய்தால் கடவுளும் நமக்கு உதவுவார் என்ற ஒரு பெரும் உண்மையை அனுபவவாயி லாக நாம் உணர்ந்துள்ளோம். தொடர்ந்தும் நீதிக்காகப் பாடுபடுவோம்.

-வலம்புரி