Breaking News

மஹிந்த அணியின் வரு­கை­யை பெரி­து­ப­டுத்தத் தேவை­யில்­லை - ரவி கரு­ணா­நா­யக்க

மஹிந்த தலை­மை­யி­லான மூன்றாம் அணி ஒருபோதும் எமக்கு அழுத்தம் பிர­யோ­கிக்கும் அணி­யாக திக­ழாது. அவர்­களின் திட்­டங்­களை முறி­ய­டிப்­ப­தற்கு நாம் தயா­ராக உள்ளோம். இதன் பிர­காரம் கிராம மட்­டத்­தி­லி­ருந்து கட்­சியை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மும்­மு­ர­மான முறையில் முன்­னெ­டுத்து வரு­கின்றோம் என்­று நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

மஹிந்த அணியின் வரு­கையை பெரி­து­ப­டுத்த வேண்­டிய தேவை­யில்லை நல்­லாட்­சி­மிக்க திட்­டங்­களை முறி­ய­டிக்கும் வகையில் மஹிந்த தலை­மை­யி­லான அணி­யினர் செயற்­பட்டு வரு­வ­தனை மக்கள் நன்கு அறி­வார்கள். இதன்­பி­ர­காரம் மக்­களின் ஆணை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு கிடைக்­கப்­பெ­று­வது உற­தி­யாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ தலை­மையில் மூன்­றா­வது அணி தோற்றம் குறித்தும் கேச­ரிக்கு கருத்தும் தெரி­விக்கும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

பாரா­ளு­மன்றம் இன்னும் சில வாரங்­களில் கலைக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. இந்­நி­லையில் மக்­களின் பணங்­களை சூறை­யா­டி­ய­வர்­களை ஜன­வரி 8 ஆம் திகதி மக்கள் நிரா­க­ரித்­தனர். இருந்த போதிலும் தற்­போது பாரா­ளு­மன்ற தேர்தல் அண்­மை­யிற்கும் தரு­ணத்தில் மீளவும் மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்கள் ஆட்­சிப்­பீடம் ஏற முனை­கின்­றனர். அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் மூன்­றா­வது அணி­யாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை சேர்ந்த சிலர் தயா­ராக வரு­கின்­றனர்.

ஆகவே மூன்­றா­வது அணி என்ற பெயரில் எம்மை எவ­ராலும் வீழ்த்த முடி­யாது நாம் பல­மான அணி­யினர். தற்­போது கிராம மட்­டத்தில் பல­மா­ன­தொரு கட்­சி­யாக ஐக்­கிய தேசியக் கட்­சியை நாம் கொண்டு வர அனைத்து சூட்­ச­ம­மான திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கிறோம்.

மஹிந்த தலை­மை­யி­லான மூன்றாம் அணி ஒரு போதும் எமக்கு அழுத்தம் பிர­யோ­கிக்கும் அணி­யாக திக­ழாது. அவர்­களின் திட்­டங்­களை முறி­ய­டிப்­ப­தற்கு நாம் தயா­ராக உள்ளோம். இதனை பெரி­து­ப­டுத்த வேண்­டிய தேவை­யில்லை.

தற்­போது பாரா­ளு­மன்ற நல்­லாட்­சி­மிக்க திட்­டங்­களை முறி­ய­டிக்கும் வகையில் மஹிந்த தலை­மை­யி­லான அணி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர்.
அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை நிறை­வேற்றும் தரு­ணத்தில் அரசின் திட்­டங்­க­ளுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் செயற்­பட்ட விதத்­தினை மக்கள் நன்கு அறி­வார்கள்.

ஆகவே நாட்டு மக்­களை ஏமாற்­றிய காலம் முடி­வ­டைந்து விட்­டது. தேர்தல் வரட்டும் மக்களின் ஆணை யார் பக்கம் உள்ளது என்பது தெரியவரும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை நாம் பெற்றுக் கொள்வோம்அடுத்த தேர்தலில் மக்களின் ஆணை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெறுவது உறதி என்றும் அவர் குறிப்பிட்டார்.