Breaking News

அரசியலுக்கு வரமாட்டேன் - கோட்டாபய

தான் எதிர்காலத்தில் அரசியலுக்குள் பிரவேசிக்கப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பாதுக்க - உடுமுல்ல பகுதியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தான் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் உரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.