விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது இராணுவம்
வடக்கில் இராணுவம் நிலை கொண்ட பின்னரே, போதைப்பொருள்கள் புழக்கத்தில் விடப் பட்டதாகவும், இராணுவமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்திய குற்றச்சாட்டை, யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நிராகரித்துள்ளார்.
பலாலிப் படைத்தளத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை இராணுவம் உயர்ந்த ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறது. எந்தவொரு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுவதில்லை.
அண்மைக்காலத்தில் இலங்கை கடற்படையுடன் இணைந்து வடக்கில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. 1963 ஆம் ஆண்டு பலாலியில் இராணுவ முகாம் நிறுவப்பட்டதன் முக்கியமான ஒரு நோக்கமே, போதைப்பொருள் கடத்தலை தடுப்பது தான்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.