புலம்பெயர் இலங்கையர்களை நாடு திரும்புமாறு மங்கள சமரவீர கோரிக்கை
புலம்பெயர் இலங்கையர்களை நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திய நோக்கிய இலங்கையின் புதிய பயணத்தில் பங்குதாரர் களாகுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறுகிய நோக்கில் எந்தவொரு புலம்பெயர் சமூகமும் செயற்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் புலம்பெயர் சமூகம், சிங்கள புலம்பெயர் சமூகம் என்ற பிளவு இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வகைமையில் ஐக்கியத்தை பேண முயற்சிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். புதிய இலங்கை பல்லின, பல்மத, பல் கலாச்சாரயே புதிய இலங்கை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவம் மற்றும் திறமைகள் நாட்டின் அபிவிருத்தியை மேலும் விருத்தியடையச் செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். புத்திஜீவிகள் வெளிநாட்டில் தங்கியிருப்பதனை மாற்றியமைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.