Breaking News

செல்வம் – சந்திரகுமார் வாய்ச்சண்டை

அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்டம் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளைப்­பி­ரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்­றிக்­கொண்­டி­ருந்த ஈ.பி.டி.பி உறுப்­பினர் முரு­கேசு சந்­தி­ர­கு­மா­ருக்கும் தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு உறுப்­பி­ன­ரான செல்வம் அடைக்­கலநாத­னுக்கும் இடையில் நேற்று சபைக்குள் கடும் வாய்ச்­சண்டை ஏற்­பட்­டது.

அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்­டத்தை விமர்­சிக்­கின்ற தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு புதிய அர­சாங்­கத்­துக்கு வாக்­க­ளித்­தது தவறு என்­பதை உணர்ந்­தி­ருப்­ப­தாக முரு­கேசு சத்­தி­ர­குமார் எம்.பி கூறி­ய­தை­ய­டுத்தே இந்த வாய்ச்­சண்டை மூண்­டது.

இதன்­போது மேலும் கூறிய சந்­தி­ர­குமார் எம்.பி. புதிய அர­சாங்­கத்தால் தமிழ் மக்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே தமிழ் மக்­களை வாக்­க­ளிக்­கு­மாறு தூண்­டி­யது. அப்­ப­டி­யானால் புதிய அர­சாங்­கத்தில் தமிழ் மக்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். எனவே தமிழ் மக்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ள­மைக்­கான பொறுப்­பினை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே ஏற்­க­வேண்டும் என்றார்.

செல்வம்

இதன்­போது குறுக்­கிட்ட செல்வம் அடைக்­க­ல­நாதன் அப்­ப­டி­யென்றால் மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியை நீங்கள் ஆத­ரிக்­கி­றீர்­களா என்று கேட்டார். இதற்குப் பதி­ல­ளித்த சந்­தி­ர­குமார் எம்.பி. நீங்கள் புதிய ஆட்­சியை ஆத­ரிக்­கின்­றீர்கள் ஆனால் உங்­க­ளுக்குப் பின்னர் உள்ள உறுப்­பினர் புதிய அர­சாங்­கத்தின் மீது விமர்­சனங்களை முன்­வைக்­கி­றார்கள். அவர்­க­ளிடம் கேட்­டுப்­பா­ருங்கள் என்றார்.

இதற்குப் பதி­ல­ளித்த செல்வம் எம்.பி சரி­யா­னதை நாம் சரி­யென்று கூறு­வது போன்று பிழை­க­ளையும் சுட்­டிக்­காட்டத் தயங்­கு­வ­தில்லை என்றார். இதன் போது பதி­ல­ளித்த சத்­தி­ர­குமார் எம்.பி. அப்­ப­டி­யென்றால் நீங்கள் ஏன் புதிய அர­சாங்­கத்தில் ஒட்டிக் கொண்­டி­ருக்­கி­றீர்கள் நிறை­வேற்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு ஒட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது என்றார்.

இதற்கு பதி­ல­ளித்த செல்வம் எம்.பி. நாம் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. மாறாக நீங்கள் தான் மஹிந்தவுக்கு வால் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தீர்கள் என்றார்.