Breaking News

வடக்கு, கிழக்கு பிர­தி­நி­தித்­து­வத்தை குறைக்கும் வகை­யில் தொகு­திகள் குறைக்­கப்­ப­டு­வதை ஏற்­றுக்­க முடி­யா­து

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை 237 ஆக உயர்த்தும் வகையில் அமைந்­துள்ள புதிய தேர்தல் முறை­யா­னது தொகு­தி­களின் எண்­ணிக்­கையைக் குறைத்­துள்­ளது. 

அந்த வகையில் தொகு­தி­களின் அடிப்­ப­டை யில் 145 எம்பிக்கள் தெரிவு செய்­யப்ப­ட­வுள்­ளனர். இது எந்த வகை­யிலும் வடக்கு, கிழக்கு, மலை­யகம் மற்றும் சிறு­­பான்­மை மக்­க­ளின் பிர­தி­நி­தித்து­வத்தைக் குறைப்­ப­தாக அமையக்­ கூடாது. அவ்­வாறு அமையும் பட்சத்தில் நாம் இதனை ஏற்­றுக்­கொள்ளமாட்­டோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் சி­ரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன் நேற்று  தெரி­வித்தார்.

யுத்தம் கார­ண­மாக ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நி­லையால் தமிழ் மக்கள் இடம்­பெ­யர நேரிட்­டது. அதனைக் கவனத்தில் கொண்டு யாழ். மாவட்டப் பிர­தி­நி­தி­களின் எண்­ணிக்­கையை முன்னைய நிலை­யி­லேயே பேண நட­வ­டிக்கை எடு­ப்­பது அவ­சியம். எக்­கா­ர ணம் கொண்டும் இருக்கும் உறுப்­பி­னர்­களை மேலும் குறைக்கும் வடக்கு கிழக்கு வகையில் புதிய தேர்தல் முறை­மைகள் அமை­வதை நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வதில்லை என்றும் அவர் சொன்­னார்.

பாரா­ளு­ம­ன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை 237 ஆக உயர்த்தும் வகையில் அமைந்­துள்ள புதிய தேர்தல் முறை யோச­னையை உள்­ள­டக்­கிய 20ஆவது திருத்தச் சட்ட மூலத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. அந்த வகையில் தொகு­தி­களின் அடிப்­ப­டையில் 145 எம்­.பிக்­களும் மாவட்ட விகி­தா­சார அடிப்­ப­டையில் 55 பேரும் தேசியப் பட்­டி­யலில் 37 எம்.­பிக்­களும் தெரிவு செய்­யப்­படும் வகையில் புதிய தேர்தல் முறை தயா­ரிக்­கப்­பட்டு அங்­கீ­­கா­ரத்தைப் பெற்­றுள்­ள­து.

அத்­து­டன், விருப்பு வாக்­கு­முறை முற்­றாக நீக்­கப்­ப­டு­கின்ற தொகுதி மற்றும் விகி­தா­சார முறை­மைகள் அடங்­கி­ய­தாக புதிய கலப்பு தேர்தல் முறை முன்­வைக்­கப்பட்­டுள்­ளது. இது தொடர்பில் கூட்­ட­மைப்­பின் தலைவர் இரா. சம்­பந்தனி­டம் கருத்து கேட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் கூறு­கை­யில்,

புதிய தேர்தல் முறையில் யாழ். மாவட்­டத்­திற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தொகை குறைக்­கப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தொகுதி அடிப்­ப­டை­யி­லான தேர்­தலின் போது 11 உறுப்­பி­னர்கள் தெரி­வா­னார்கள். பின்னர் விகி­தா­­சார அடிப்­ப­டையில் கடந்த தடவை 9 பேர் தெரிவு செய்­யப்­பட்­டார்கள். எனினும், புதிய அடிப்­ப­டையில் யாழ். மாவட்ட பிர­தி­நி­தி­களின் எண்­ணிக்கை 9 இல் இருந்தும் 7 ஆக குறையும் சாத்­தியம் உள்­ளது. இதனை நாம் ஏற்­றுக்­கொ­ள்ள முடி­யா­து. 

இறு­தி­யாக 77 இல் நடை­பெற்ற தேர்­தலில் 160 தேர்தல் தொகு­தி­களில் இருந்து மக்கள் பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­பட்­டார்கள். அவை தற்­பொ­ழுது 145 தொகு­தி­க­ளாக குறைக்­கப்­படும் பட்­சத்தில் 15 தொகு­திகள் குறைவடையும். இந்நிலையில் தொகுதிகள் எங்கு குறை­வ­டையும் என்ற கேள்வி எழு­கின்­றது.

அநே­க­மாக இதன் தாக்கம் வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யகப் பிர­தே­சத்­தையே சார்ந்­தி­ருக்கும். இதனால் குறிப்­பாக தமிழ் மக்­களின் பிர­தி­நி­தித்­து­வமே குறையும் வாய்ப்­பு­ள்­ளது. அசா­தா­ர­ண­மான சூழல் கார­ண­மாக வட­ப­குதி மக்கள் இடம் பெயர நேரிட்­டது, நாட்டில் ஏனைய பிர­தே­சங்­களில் யுத்தம் கார­ண­மாக மக்கள் இடம் பெயர்வு ஏற்­ப­ட­வில்லை. வடக்கு, கிழக்கில் இருந்த பல்­லா­யி­ர­க்­க­ணக்­கான மக்கள் வெளி­யே­றி­யுள்­ளனர். அவர்கள் மீண்டும் பழைய இடங்­க­ளுக்கு திரும்ப வேண்டும்.

புதிய சூழலில் தேர்தல் நடை­பெ­றும் பட்­சத்தில் பர­வ­லாகத் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறை­வ­டைய வாய்ப்­புள்­ளது. அதே­போன்று மலை­யக மற்றும் முஸ்லிம் மக்களின் பிர­தி­நி­தித்­துவம் எந்­த­­ளவு தூரம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது என்­பதை நன்­றாக ஆராய்ந்தே நாம் ஒரு முடி­வுக்கு வர­வேண்டும். எழுந்­த­மா­ன­மாக இந்த முறை­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தற்­போ­தைய தேர்­தலின் அடிப்­ப­டையில் விகி­தா­­சார முறை­­மையின் கீழ் சம­­னாக உள்­ள­து. எனி­னும், தொகு­தி­கள் குறையும் போது அது சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை வெகு­வாகப் பாதிப்­ப­தாக இருக்­கும்.

அரசின் அடிப்­படை நோக்கம் விகி­தா­சார தேர்தல் முறையை மாற்­றி­ய­மைத்து ஒரு குறிப்­பிட்ட தொகை உறுப்­பி­னர்­களை தொகுதி அடிப்­ப­டை­யி­லும் மேலும் ஒரு குறிப்­பிட்ட தொகை­யி­னரை விகி­தா­சார அடிப்­ப­டை­யிலும் ஏனைய ஒரு தொகுதி உறுப்­பி­னர்­களை தேசியப் பட்­டியல் அடிப்­ப­டை­யிலும் தெரிவு செய்­வ­தாகும்.

வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரையில் மக்களின் குடிப்­பெ­ய­ர்வு வாக்­கா­ளர்­களை வெகு­வாகப் பாதித்­துள்­ளது. மக்­களின் காணி­களில் இரா­ணுவம் குடி­கொண்­டுள்­ளதால் மக்கள் மீளக் குடி­யேற முடி­யாது இடம் பெயர்ந்­துள்­ளனர். இதனால், அவர்கள் வாக்­க­ளிக்க முடி­யாத நிலை­யுள்­ளது. இவை­ய­னைத்தும் எமக்குப் பாத­க­மான நிலை­மை­யையே ஏற்­ப­டுத்­து­வ­தாக இருக்கும். மேலும் வடக்கு, கிழக்­கிற்கு வெளி­யே­யுள்ள எமது மக்­க­ளும் தங்கள் பிர­தி­நி­தி­க­ளை தெரிவு செய்யக் கூடிய விதத்தில் விகி­தா­­சார தேர்தல் முறை அமை­ய­வேண்டும்.

எவ்­வா­­றெ­னினும் புதிய முறை­யிலா, அல்­லது பழைய முறை­யி­லா தேர்தல் நடை­பெறும் என்­பதை தற்­பொ­ழுது கூற முடி­யாது. புதிய முறையில் தேர்தல் நடை­பெ­று­­மானால் தேர்தல் மாவட்­டங்கள் நிர்­ண­யிக்­கப்­பட வேண்டும். இதற்­கென தேர்தல் நிர்­ணயக் குழு நிய­மிக்­கப்­பட வேண்டும். அக்­குழு கலந்­து­­ரை­யா­டல்­களை நிகழ்த்தி தமது முடி­வு­களை மேற்­கொள்ள வேண்டும் என்­றார்.