தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு கொழும்பில் கூடுகிறது கூட்டமைப்பு
தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு தொடர்பான கூட்டமைப்பு தலைவர்களின் சந்திப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களுக்கு உரித்தான இறையாண்மை, அந்த இறையாண்மையுடன் கூடிய சுயாட்சி மற்றும் இணைந்த தாயகத்தில் முழுமையான சுயாட்சி என்பதே எங்களது மிகப் பிரதானமான கோரிக்கையாக இருக்கும் என்று கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலு,ம் பாதுகாப்புடன் கூடிய வடகிழக்கு மக்களுடைய மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை, காணாமல் போனவர்களை கண்டறிதல் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான வாழ்வாதார உதவிகள் என்பனவே ஏனைய விடயங்களாக உள்ளடக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.








