இளம் சமூகத்தை நோக்கி நகரும் த.தே.ம.முன்னணி
வெள்ளிக்கிழமை மாலை (24) யாழ்.நகரப் பகுதியில் பிரச்சாரங்கள் நடைபெற்றுள்ளது. மாணவ சமூகத்தினருக்கான பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றிருந்தது.
இக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வேட்பாளர்களான செல்வராசா கஜேந்திரன்,வி. மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மணவர்கள் பலர் அரசியல் , சட்டம் சம்மந்தமான கேள்விகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டிருந்தனர். மாணவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித் திருந்தார்.











