தமிழகத்தின் சிறப்பு முகாமில் இருந்த 4 இலங்கையர்கள் விடுதலை
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் 4 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 19 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வலியுறுத்தி சில மாதங்களாக உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களில் 4 பேரை விடுதலை செய்து தமிழக அரசு கடந்த 11-ம் திகதி உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஈழ நேரு, மதுரை மாவட்டம் திருவாதவூர் முகாமைச் சேர்ந்த உமாரமணன், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமைச் சேர்ந்த ரமேஷ், சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ஜெகன் எனும் ஸ்ரீஜெயன் ஆகிய 4 பேர் நேற்று மாலை திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என, தி ஹிந்து ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.








