"செங்கோலை தூக்கிக்கொண்டு ஓடுவேன்"
அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் மஹிந்தவுக்கு பிரதமர் பதவி கொடுக்காவிடின், செங்கோலை தூக்கிக்கொண்டு நாடாளுமன்ற சுற்றி சுற்றி ஓடுவேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
பொல்பித்திகமவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த கூட்டத்தில் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.








