இலங்கை பாகிஸ்தான் மோதல்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்று, தொடரில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் இன்றைய போட்டி நடைபெறவுள்ளது. இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் சச்சித்திர சேனாநாயக்கவுக்கு பதிலாக திஸ்ஸர பெரேரா இணைத்துக் கொள்ளப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேநேரம் பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஹபீஸ{க்கு பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளமை, அணியின் சமநிலையை பாதித்திருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இமாம் வசீம் இணைத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








