Breaking News

விடுதலைப் புலிகள் 6 பேர் இந்தியாவில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஆறுபேர் இந்தியாவின் மத்திய கல்கத்தா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றைய தினம் குறித்த ஆறுபேரும் கைதுசெய்யப்பட்டனர் எனவும், கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து கல்கத்தாவுக்கு இவர்கள் வருகை தந்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திர தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் அந்த நிகழ்வில் அசம்பாவிதங்களை ஏற்படுத்தவே குறித்த ஆறுபேரும் கல்கத்தா வந்திருக்காலம் என்ற சந்தேகத்தின் பேரிலே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.