Breaking News

சுரேசுக்கு பதில் கூற வேண்டிய அசியம் எனக்கு இல்லை! - சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் தேசியப் பட்­டியல் நிய­ம­னங்கள் தொடர்பில் எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் சர்ச்­சை­க­ளையும் புறந்தள்ளுவதாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மிகவும் ஆழ­மாக சிந்­தித்து விவா­தித்த பிறகே கூட்­ட­மைப்பின் சார்பில் துரை­ரட்­ண­சிங்கம் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா ஆகி­யோ­ருக்கு தேசியப் பட்­டியல் நிய­மனம் வழங்கும் முடிவு எடுக்­கப்­பட்­டது எனவும் அவர் பி.பி.சி. தமி­ழோ­சை­யிடம் தெரி­வித்துள்ளார்.

தீவிர ஆய்­வுக்குப் பிறகே முடிவு எடுக்­கப்­பட்­டது. சில கொள்­கை­களின் அடிப்­ப­டை­யி­லேயே அந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது;

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்­துக்கு ஒவ்­வொரு இடம் வழங்­கு­வது என்று முடிவு செய்­யப்­பட்­டது என்றும், கூட்­ட­மைப்பின் சார்பில் பெண் ஒருவர் பாரா­ளு­மன்றம் செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்­யப்­பட்­டது

குறைந்த வாக்கு வித்­தி­யா­சத்­தி­லேயே சாந்தி தோல்­வி­ய­டைந்­தி­ருந்தார் என்­பதும், யாழ் தேர்தல் மாவட்­டத்தைக் காட்­டிலும் வன்னி தேர்தல் மாவட்­டத்தில் குறைந்த அள­வுக்கே கூட்­ட­மைப்பின் சார்பில் உறுப்­பி­னர்கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டனர் என்­பதும் அவ­ரது தேர்­வுக்கு ஒரு காரணம். கிழக்கு மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை மற்றும் அம்­பாறை தேர்தல் மாவட்­டங்­க­ளி­லேயே மிகக் குறை­வான உறுப்­பி­னர்கள் தேர்­வா­னாதால் அப்­ப­கு­திக்கு ஒரு இடம் வழங்கும் முடிவு எடுக்­கப்­பட்­டது

வட மாகா­ணத்­துக்­கான இடத்தை முடிவு செய்­யும்­போது யாழ்.தேர்தல் மாவட்­டத்தில் ஏற்­க­னவே ஐந்து உறுப்­பி­னர்கள் அங்கு தேர்­வா­கி­யுள்ள நிலையில், குறைந்த வாக்கு வித்­தி­யா­சத்தில் ஆறா­வது இடத்தை தவறவிட்­ட­வரை புறந்­தள்ளி அவ­ருக்கும் குறை­வான வாக்­குகள் பெற்று அடுத்த இடத்தில் இருந்த சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்கு இட­ம­ளிப்­பது குறித்து பல கேள்­விகள் எழுந்­தன.

தேசியப்பட்­டியல் நியமனங்கள் குறித்து கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவை விமர்சித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றார்.