Breaking News

எதிர்க்கட்சி தலைவர் எமக்குத்தான் திருவாய் மலரும் சம்பந்தன் !

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த்
தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.

நேற்று அக்கட்சியால் வெளியிடப் பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியினால் வெளி யிடப்பட்ட ஊடக அறிக்கை வருமாறு, கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர் தலில் ஐக்கிய தேசிய கட்சியானது பாராளுமன்றத்தில் அதிகப்படியான ஆசனங்களை பெற்ற கட்சியாக காணப்படுகின்றது. 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட மைப்பானது இரண்டாவது அதிகப் படியான ஆசனங்களை பெற்ற கட்சியாக உள்ளது. தற்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட மைப்பு ஆகிய இரண்டு கட்சிகளிலும் போட்டியிட்டு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் அமைச்சர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆகவே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய இரு கட்சி களும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பாளிகளாக உள்ளனர். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் என்ற அடிப் படையில் அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு வெளிப்படையாக தமது ஆதரவை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

இதேவேளை தமிழர் அரசியல் வரலாற்றில் முதல் முதலாக 1977ஆம் ஆண்டு தேர்தலில் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டு 31155 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்று 04.08.1977 இல் எதிர்க்கட்சி தலைவராக முதலாவது தமிழ் தலைவராக அமிர்தலிங்கம் அவர்கள் கடமையாற்றியிருந்தார் என்பதும் பின்னர் அவர் கொள்ளையிலிருந்து விலகிச்செல்வதாக தமிழீழ விடுதலைப்புலிகளால் 13.07.1989 இல் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.