Breaking News

புதிய எதிர்க்கட்சியொன்று உருவாக்கப்படுகிறது!

புதிய எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீவிர ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகள் இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகள் மற்றும் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு புதிய எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் முனைப்புக்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய கூட்டணியை உருவாக்கி அதன் ஊடாக பாராளுமன்றின் எதிர்க்கட்சிப் பதவியை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரியவருகிறது.எவ்வாறெனினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்னதாக பரிந்துரை செய்ய்பபட்டதற்கு அமைய குமார வெல்கமவையே நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்சியில் 50 முதல் 60 வரையிலான உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.