Breaking News

ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பில்

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த பொது மக்கள் சாட்சியம் பதிவு செய்யும் செயற்பாடுகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நான்கு நாட்கள் இந்த செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ குணதாச தெரிவித்துள்ளார். இந்தநிலையில், 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் களுவாஞ்சிக்குடி பிரதேசத்திலும், 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் வாழைச்சேனை பிரதேசத்திலும் இந்த சாட்சி பதிவுகள் இடம் பெறவுள்ளன.

அத்துடன் இந்த ஆணைக்குழுவிற்கு இதுவரை 21 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.