ஜெனீவா அறிக்கை அரசியல் அழுத்தமொன்றை பிரயோகிக்கும் - சம்பந்தன்
ஜெனீவா அறிக்கை அரசியல் அழுத்தமொன்றை பிரயோகிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் இலங்கை குறித்த அறிக்கை அழுத்தங்களை பிரயோகிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டிருந்தால், இன்று சர்வதேச சமூகம் அழுத்தங்களை பிரயோகித்திருக்காது.
எனவே எதிர்வரும் காலங்களில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டாலும் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே இந்தப் பிரச்சினை சர்வதேச ரீதியாக பரிணமிக்கின்றது.
அரசாங்கம் இன மத பேதங்களை களைந்து அனைவருக்கும் உரிமைகளை வழங்க வேண்டும்.அவ்வாறு செய்யாவிட்டால் இனங்களுக்கு இடையில் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.








