ஊழல் ஒழிப்பு விசாரணை பிரிவு அதிகாரியின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்
மாத்தறை வல்கம பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கு சூட்டு சம்பவத்தில் வீட்டிலிருந்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் ஒழிப்பு விசாரணை பிரிவின் விசாரணை அதிகாரி ஒருவரின வீட்டின் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.