Breaking News

ஐ.தே.க.வின் கனவு பலிக்காது – திஸாநாயக்க

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தி, அதன் மூலம் பலம் வாய்ந்த அரசாங்கத்தை அமைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

‘ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பிளவை ஏற்படுத்தி, அதனூடாக ஐ.தே.க 125 ஆசனங்களை பெற்று பலம் பொருந்திய ஆட்சியொன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஆனாலும், மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் கனவு கலைந்துவிட்டது.

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின் பின், ஆட்சி அமைப்பது ராஜபக்ஷவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பே ஆகும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.