வவுனியா இ.போ.ச. ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு
இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா டிப்போ சாரதிகள், நடத்துநர்கள் இன்று வியாழக்கிழமை காலை 5 மணியில் இருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த திங்கள் கிழமை வவுனியா நகரப் பகுதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் போக்குவரத்து சேவையினருக்கும் இ.போ.ச. போக்குவரத்து சேவையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.இதையடுத்து இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி ஒருவர் தாக்கப்பட்டிருந்தார்.
தற்போது குறித்த சாரதி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கை விலங்கிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் ஒரு குற்றவாளி போல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்தும் இது தொடர்பில் தனியார் போக்குவரத்து சாரதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தும் வவுனியா சாலை சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று உயர்தரப் பரீட்சை நடைபெறுவதாலும் அலுவலக நாள் என்பதாலும் பலரும் போக்குவரத்து வசதி இன்று அவதிப்படும் நிலை தோன்றியுள்ளது.








