இந்தியாவின் 69 வது சுதந்திர தினம் இன்று
இந்தியாவின் 69 வது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி வரும் வழியில், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். அதைதொடர்ந்து நாட்டு மக்களுக்கு அளித்த அவரது உரை பின் வருமாறு ஆகஸ்ட் மாதம் 15-ம் திகதி சுதந்திரத்தின் விடியல். 125 கோடி மக்களுக்கான கனவு மற்றும் நம்பிக்கைக்கான நேரம் இது.
வீரம் மிக்க சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்.. இளைஞர்கள் பெண்கள் என தலைநமிர வைத்த தலைவர்களுக்கு வாழ்த்துக்கள் . நமது நோக்கம் நல்ல ஒற்றுமை ஓங்கி வளர வேண்டும். நாட்டின் ஒற்றுமை குலைந்தால் மக்களின் கனவும் சீரழிந்து விடும். இந்தியாவின் சுதந்திரத்தை தியாகம் செய்த அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
இந்திய தேசிய கொடியை சாட்சியாக வைத்து சொல்கிறேன். கடந்த ஓராண்டில் ஒரு ஒரு ஊழல் கூட நடைபெறவில்லை. ஜி 20 மாநாட்டில் கருப்பு பணத்தை மீட்க சர்வதேச உதவியை நாடினேன். கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கமுடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.








