வெனிஸ் திரைப்பட விழாவிற்குச் செல்லும் முதல் தமிழ்த் திரைப்படமாக தனுஷின் விசாரணை தேர்வு
தனுஷ்-வெற்றிமாறன் இணைந்து தயாரித்து வெளிவந்த ‘காக்கா முட்டை’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனைத்தொடர்ந்து, தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி விசாரணை என்ற படத்தை தயாரித்தனர்.
வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படம், இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. படத்தில் தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி, கிஷோர், முருகதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங் களில் நடித்துள்ளனர்.
கடந்த 72 வருட வரலாற்றில் வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப்பிரிவில் திரையிடப்படும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை விசாரணை படம் பெற்றிருக்கிறது.