நல்லாட்சிக்குப் பதிலாக பாதாள ஆட்சியே நடைபெறுகிறது - சுசில் பிரேமஜயந்த
நல்லாட்சி என்ற பெயரில் பாதாள ஆட்சியை நடத்திச் செல்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
ப்ளூமெண்டல் சம்பவமானது அமைதியான தேர்தலில் குறைபாட்டை ஏற்படுத்தி இருப்பதாக ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பது உண்மை என்றும் அந்த சம்பவத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர் ரவி கருணாநாயக்க என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் வற்புறுத்தலால் கடுவல பொலிஸ் நிலையத்தை சுற்றி விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், அவருக்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றார் என்றும் சுசில் பிரேமஜயந்த கேள்வி எழுப்பினார்.








