சுமந்திரனுக்காக மீண்டும் வாக்குக் கேட்க யாழ்.வருகிறார் சம்மந்தன்
நடைபெறவுள்ள பாரளுமன்ற பொது தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுமந்திரன் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பலை ஒன்று எழுந்துள்ள நிலையில் இதனை சமாளித்து அவருக்கான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இரா.சம்மநன் யாழ்.வரு கைதரவுள்ளார்.
இவ்வாறு வருகைதரும் அவர் இரண்டாம் கட்ட பிரச்சார கூட்டத்தினை தலமைதாங்கி நடத்தவும் உள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வருகைதரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் இவ் பிரச்சார கூட்டத்தினை தலமைதாங்கி நடத்தவுள்ளார்.
சுமந்திரன் முன்னிலைப்படுத்தி தேர்தலில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வடமராட்சி மாலுசந்தி, சாவகச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களில் இவர் கலந்து கொள்ளவுள்ளார்.இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டம் ஒன்றிலும் இரா.சம்மந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.








