ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டுடன் பணியாற்ற முடியும்! ரணில்
பொதுத் தேர்தல் அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரத்தைப் பெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணக்கப்பாட்டுடன் தனக்கே பணியாற்ற முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் முரண்பட்டுவரும் தரப்பினருக்கு இதனைச் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடன் இணக்கப்பாட்டுடன் பணியாற்ற ஜனாதிபதியும் தயாராக இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை மேம்படுத்தும் வெளிநாட்டு உதவிகள், வெளிநாட்டு முதலீடுகள், சந்தை வாய்ப்புக்கள் ஆகியவற்றை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் அமர்த்துமாறும் அனைத்து மக்களிடமும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.








