ரணில் மைத்திரியைச் சந்தித்தார்! அமைச்சரவை நாளை நியமனம்!
பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (19) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார்.
அடுத்த அமைச்சரவையை நியமிப்பது குறித்து இதன்போது பேச்சு நடத்தப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க நாளை 20ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், அத்துடன், இதன்போது அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.








