Breaking News

இங்கு நேர்மையாக விசாரணை செய்ய முடியாது! சர்வதேச நீதிபதிகளே விலகிச் செல்கின்றனர்

திரு­ம­லையில் ஐந்து மாண­வர்கள் படு­கொலை மற்றும் மூதூரில் 17 தொண்டர் நிறு­வன ஊழி­யர்கள் படு­கொலை போன்றவற் றுக்கு இது­வரை எந்தத் தீர்வும் கிட்­ட­வில்லை.

இந்த விசா­ர­ணையின் பொருட்டு சர்­வ­தேச நீதி­ப­திகள் நிய­மிக்­கப்­பட்டும் எந்தப் பயனும் கிடைக்­க­வில்லை. நேர்மை­யான விசா­ரணை­களை மேற்­கொள்ள முடி­யா­தென்­று அவர்­களே ஓடி­விட்டனர்.

இந்த நிலையில் உள்­ளக விசா­ரணை தொடர்பில் தமி­ழர்­க­ளுக்கு எவ்­வாறு நம்­பிக் கை பிறக்கும்? என்று எதிர்க்­கட்சித் தலை­வ ரும், தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­ வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேள்வி எழுப்­பினார்.

தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் தீரும் வரை எதிர்க்­கட்­சி­யி­லேயே நான் இருக்க விரும்­பு­கின்றேன். நான் முதலில் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர். அடுத்து நான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் எனக்கு எதிர்க்­கட்சி பத­வி­யென்­பது இதனால் தான் கிடைத்­தது என்றும் தெரி­வித்தார். குச்­ச­வெளி பிர­தேச பெண்கள் வலை­ய­மைப்பின் ஏற்­பாட்டில் நடத்­தப்­பட்ட பிரச்­சி­னைகள் வெளிப்­பாட்டு களத்தில் கலந்­து­கொண்டு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், 

நான் 33 வரு­டங்­க­ளுக்கு மேலாக பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்றேன். பல சந்­தர்ப்­பங்­களில் ஆட்­சி­யா­ளர்கள் என்னை விலை பேசி­னார்கள். எனினும், நான் விலை­போ­க­வில்லை விலை போகவும் மாட்டேன். தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைக்கு எதி­ரான நிரந்­த­ர­மான தீர்வு கிடைக்கும் வரை எதிர்க்­கட்­சி­யி­லேயே நான் இருக்க விரும்­பு­கின்றேன். தமிழ்­மக்­க­ளுக்­கான தீர்வைப் பெறு­வ­தி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இலக்­காக இருக்கும்.

உள்­ளக விசா­ர­ணையின் மீது தமிழ் மக்­க­ளுக்கு என்­றுமே நம்­பிக்­கை­யில்லை என்­ப­தி­னா­லேயே சர்­வ­தேச விசா­ர­ணை­யினைக் கோரி வந்­துள்­ளார்கள். உதா­ர­ண­மாக, 2006 ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையில் 5 மாண­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­துடன், மூதூரில் 17 தொண்டர் நிறு­வன ஊழி­யர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். இது சம்­பந்­த­மாக உள்ளூர் விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு இது­வரை எந்­த­வி­த­மான தீர்வும் கிடைக்­க­வில்லை. இந்த விசா­ர­ணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக இந்­தி­யாவின் ஓய்­வுப்­பெற்ற பிர­தம நீதி­ய­ர­சரும் ஏனைய சர்­வ­தேச நீதி­ப­தி­களும் நிய­மிக்­கப்­பட்டும் கூட தீர்வு காணப்­ப­ட­வில்லை.

நேர்­மை­யான விசா­ரணை செய்ய முடி­யாது என்று அவர்­க­ளா­கவே விலகிச் சென்­றுள்­ளார்கள். எனவே தான் உள்­ளக விசா­ர­ணையில் நம்­பிக்­கை­யில்லை என மக்கள் கூறி வரு­கின்­றனர். இதன் கார­ண­மா­கவே வட மாகா­ணத்­திலும் , தமி­ழ­கத்­திலும் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன.

நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்ற மனித உரிமைப் பேர­வையில் உரை­யாற்­றிய மனித உரிமை ஆணை­யா­ளரும், இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் இறு­தி­யுத்­தத்­தின்­போது அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள். எனவே இதற்கு ஒரு பரிகாரம் காணப்பட வேண்டும் என்பதையே அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

ஆகவே, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் ஐ.நா மனித உரிமைப் பேரவையும் சர்வதேச சமூகமும் அக்கறை காட்டி வருகின்றன. எனவே இச்சந்தர்ப்பதை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.