Breaking News

கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது - மகிந்த

ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்ற விசாரணையை நிராகரித்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எந்தவழியிலும் தான் அதற்கு ஒத்துழைக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர்,

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களைக் கையாள வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை. இலங்கை அனுபவம்மிக்க, ஆற்றலுடைய நீதிபதிகளைக் கொண்டுள்ளது.

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைக்கு உதவ மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கிறார். ஆனால் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.