கலப்பு நீதிமன்றத்தை வரவேற்கிறது இலங்கை
இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை நிராகரிக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு நேற்று அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கலப்பு நீதிமன்றங்களை அமைப்பதும் கூட சாத்தியப்பாடுகளில் ஒன்றாக உள்ளது. அதுபற்றி நாம் ஆராய வேண்டும். எந்தவொரு யோசனை தொடர்பாகவும், கதவுகளை இறுக மூடிக்கொள்வதற்கு நாம் தயாராக இல்லை” என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.