Breaking News

இலங்கை அரசாங்கத்தின் யோசனைக்கு இந்தியா ஆதரவு தரும் - இலங்கை நம்பிக்கை

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை அமைக்கும் இலங்கை அரசாங்கத்தின் யோசனைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கியமான நாடுகள் ஆதரவு கிடைக்கும் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன,

‘உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் தீர்மானம் நாளை கொண்டு வரப்படவுள்ளது. நாம் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளோம்.

இந்த நாடுகள் உள்ளூர் விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஐ.நா விசாரணை அறிக்கையில் கலப்பு நீதிமன்றத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், உள்நாட்டு விசாரணையை ஏற்றுக் கொள்ளும் தீர்மானமே ஜெனிவாவில் நிறைவேற்றப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.