Breaking News

பிரபாகரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார் பிரதமர்

இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்­பாக வழக்குத் தொடர்­வ­தென்றால் அதிக அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய பிர­பா­க­ர­னுக்கும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பு­க்கும் எதி­ரா­கவே வழக்குத் தொடர வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்­பி­ன­ருக்கு மாத்­திரம் வழக்குத் தொடர்­வது நியா­ய­மா­காது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவித்தார்.

உண்­மையை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்­காக எவ­ரையும் வேட்­டை­யாடக் கூடாது. இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பையும் மக்­களின் இறை­யான்­மையும் பாதிக்­காத வகையில் உள்­ளக விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும். இதற்­காக ஐ.நா. வில் எமக்கு ஆத­ர­வ­ளித்த அனைத்து சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் எனது நன்­றியை தெரி­வித்துக் கொள்­கின்றேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.்

கொழும்பு ஹைட்பார்க் (பிலிப் குண­வர்த்­தன மைதானம்) மீள் புன­ர­மைக்­கப்­பட்டு மக்­க­ளிடம் கைய­ளிக்கும் வைபவம் நேற்று திங்­கட்­கி­ழமை மாலை இடம்­பெற்­றது. கொழும்பு மாந­கர மேயர் ஏ.ஜே.எம். முஸாம்மிலின் அழைப்பின் பேரில் இந் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றுகையிலேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

பிர­தமர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

யுத்­தம் தொடர்பில் ஒரு தரப்­பி­ன­ருக்கு எதிராக மட்டும் வழக்­குத்­தாக்கல் செய்­வதால் நாட்டில் தேசிய நல்­லி­ணக்­கத்­தையோ, இணக்­கப்­பாட்­டையோ மக்­க­ளிடம் ஏற்­ப­டுத்த முடி­யாது. இந்த யுத்­தத்தில் பெரும் அழிவை ஏற்­ப­டுத்­தி­ய­வர்கள் பிர­பா­க­ரனும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பினருமே ஆவர்.

எனவே அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொடர வேண்டும். ஒரு தரப்­பி­ன­ருக்கு வழக்குத் தொடர்­வதால் நல்­லி­ணக்கம் ஏற்­படப் போவ­தில்லை.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பையோ அல்­லது மக்­களின் இறை­யான்­மையோ பாதிக்கும் விதத்தில் எந்த வித­மான செயற்­பாடும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­மாட்­டாது. சர்­வ­தேச விசா­ர­ணைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது. இது தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதால் கிடைக்கப் பெற்ற வெற்­றி­யாகும்.

எனவே நாட்­டிற்கு எதி­ரான பொரு­ளா­தார தடை விதிக்­கப்­படும், சர்­வ­தேச விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும் என தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் எவரும் அஞ்சத் தேவை­யில்லை. ஆனால் உண்­மையை கண்­ட­றிய வேண்டும். அதற்­காக எவ­ரையும் வேட்­டை­யாட வேண்­டிய அவ­சி­ய­மில்லை. உண்­மையைக் கண்­ட­றி­வதன் மூலமே தேசிய மீள் இணக்­கத்­தையும், இனங்­க­ளிடையே சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்த முடியும்.

உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­காக விசேட ஆணைக்­குழு அமைக்­கப்­படும். அதன் கீழ் அனைத்து மதங்­க­ளையும் சார்ந்த மத­கு­ருமார் அடங்­கிய கரு­ணைக்­கு­ழுவும் அமைக்­கப்­படும். இதன் மூலம் காணாமல் போனோர் தொடர்­பாக முறைப்­பா­டுகள் பெறப்­படும்.

இம் முறைப்­பா­டுகள் தொடர்­பாக சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதா இல்­லையா என்­பது தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சட்­டக்­குழு இலங்­கையின் சட்­டங்­க­ளுக்கு அடிப்­ப­டையில் தீர்மானம் எடுக்கும்.

பொது­ந­ல­வாய நாடுகள் அமைப்பின் நீதி­ப­திகள் சட்­டத்­த­ர­ணிகள் உத­விப்­பெ­றப்­ப­டு­மானால் அது தொடர்­பாக தன்­னிச்­சை­யாக முடி­வுகள் பெறப்­பட மாட்­டாது. பாரா­ளு­மன்­றத்­திற்கு இவ்­வி­டயம் முன்­வைக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்­து­ட­னேயே அனைத்து நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­படும்.

ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிகள் உட்­பட பல கட்­சிகள் இணைந்து ஜனா­தி­பதி மைத்­திரி பால­சி­றி­சே­னவின் வழி­காட்­ட­லுடன் தேசிய அர­சாங்கத்தை அமைத்துள்ளன. இவ் அர­சாங்­கத்தில் எதிர்­கட்சித் தலை­வ­ராக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் நிய­மிக்­கப்ட்­டுள்ளார். எதிர்­கட்­சியின் பிர­தம கொற­டா­வாக ஜே.வி.பி.யின் தலைவர் அநுர திஸா­நா­யக்க நிய­மிக்­க­பட்­டுள்ளார். இது இல்ங்­கையில் ஏற்­பட்ட ஒரு அர­சியல் யுகப் புரட்­சி­யாகும். இதற்கு முன் இவ்­வா­றான ஒரு அர­சியல் யுகப் புரட்சி ஏற்­பட்ட கிடை­யாது.

கடந்த காலங்­களில் சர்­வ­தேச விசா­ர­ணைகள் எடுக்­கப்­படும், எமது படை­யி­ன­ரு­கே­தி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை வரும், சர்­வ­தேச நீதி­மன்ற விசா­ரணை வரும் என மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளால் மக்களிடையே அச்சம் குடிகொண்டது.

ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு இந்த அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கபட்டது. அத்துடன் சர்வதேச விசாரணை என்ற அச்சம் தகர்க்கப்பட்டது என்றார்.

இந் நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மாகாணசபை உறுப்பினர்கள், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் எம்.பி.க்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.