எக்னெலிகொடவை இராணுவத்தினர் விடுதலை செய்ததற்கான சாட்சிகள் இல்லை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள், பிரகீத்தை விடுதலை செய்ததாக தெரிவித்த போதிலும், அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் இது தொடர்பில் தொடரந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
பிரகீத் தொடர்பில் தொடர்ந்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவு தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு பிரிவினரிடம், குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது,
கிரித்தலை முகாமிற்கு பிரகீத்தை அழைத்து சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் அவரை விடுதலை செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.யுத்த நிறைவு ஆண்டிய காலப்பகுதியில் இராணுவத்தினரால் நபர்கள் கடத்தி செல்லப்பட்டு, துன்புறுத்தி விசாரணை மேற்கொண்டமை சட்ட விரோதமானதென உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரகீத் காணாமல் போன சம்பவம் தொடர்பில், இராணுவத்துடன் தொடர்பு வைத்து செயற்பட்ட முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் இருவர் , இராணுவத்தின் லெப்டினட் கேர்ணல்கள் இருவர் உட்பட இராணுவத்தை சேர்ந்த 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.