Breaking News

சுமந்திரன் தலைமையிலான குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தலைமயிலான குழுவொன்று ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை வெளியிடப்பட்டு அதற்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்ததன் பின்னரே சுமந்திரன் தலமையிலான இந்தக் குழு ஜெனீவா விஜயம் செய்யவுள்ளது.இதேவேளை ஜெனீவா அறிக்கை மற்றும் அரசாங்கத்தின் பதில் குறித்தும் ஆராயப்படும் எனவும், தெரிவிக்கப்படுகிறது.

சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவொன்றே இவ்வாறு பயணம் மேற்கொள்ளவுள்ளது.எனினும் இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை.